சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பணியிடங்கள்
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பணியிடங்கள்
UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 11:27 AM
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஒரு முக்கிய வங்கியாகும். இந்த வங்கியில் 1163 கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப சில பிரிவினருக்கு சலுகைகள் உள்ளது. விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்கப் பின்வரும் கல்வித் தகுதிகள் ஏதாவது ஒன்றினைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு ; பிளஸ் 2 அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி; மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ இன் பாங்கிங் படிப்பில் தேர்ச்சி; பத்தாம் வகுப்பு அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
இந்தக் கல்வித் தகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு குறைந்த பட்ச மதிப்பெண்களில் சில சலுகைகள் உள்ளன. விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு அனுப்ப்படும். எழுத்துத் தேர்வு குறித்த முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை கோர் வங்கிக் கணக்கு வசதியுள்ள ஏதாவது ஒரு சென்ட்ரல் பாங்க் கிளையில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ரூ.50/ மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி ?
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கான பிரத்யேகமான உபயோகத்திலுள்ள ஒரு இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திய விபரங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் போதுமான நகல்கள் எடுத்து பத்திரப்படுத்தவும். இதனைத் தற்போது அனுப்பத் தேவையில்லை. எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற நிலைகளின் போது இது தேவைப்படும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 08.12.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 13.02.2011
இணைய தள முகவரி : "www.centralbankofindia.co.in"
