தேசிய திறனாய்வு தேர்வு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
தேசிய திறனாய்வு தேர்வு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 12:33 PM
விருதுநகர்: தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை முன் வர வேண்டும்.
ஏழாம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருப்பவர்கள் இந்த தேர்வு எழுதலாம். தேர்ச்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வீதம் பத்தாம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். 180 கேள்விகளுக்கு 3 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு போல் ஓ.எம்.ஆர்., சீட்டில் வினாக்களுக்கு பதில்களை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
இதில் கேந்திரிய, மெட்ரிக், தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிகம் பங்கேற்கின்றனர். பல மாணவர்களுக்கு வினாக்களுக்கு எப்படி விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. பல அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வில் வெற்றி பெற, பள்ளிகளில் முழு அளவில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
