தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அன்னை தெரசா கண்காட்சி ரயில்; மாணவர்கள் ஆர்வம்

அன்னை தெரசா கண்காட்சி ரயில்; மாணவர்கள் ஆர்வம்

அன்னை தெரசா கண்காட்சி ரயில்; மாணவர்கள் ஆர்வம்


UPDATED : டிச 28, 2010 12:00 AM

ADDED : டிச 28, 2010 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2010 12:00 AM ADDED : டிச 28, 2010 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: “அன்னை தெரசா கண்காட்சி ரயில் மதுரை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்,” என கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே. கோயல் தெரிவித்தார்.


தெரசாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கண்காட்சி ரயிலை, மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த டிச., 26ல் துவக்கினார். ‘ஏசி’ வசதி செய்யப்பட்ட மூன்று பெட்டிகளில், தெரசாவின் அர்ப்பணிப்புகள், சேவைகள் குறித்து விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தெரசாவின் இளமை வாழ்க்கை, தொண்டுஉள்ளத்துடன் அவர் நடத்தி வந்த சேவை அமைப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மதுரை வந்தது.


இதை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் துவக்கி வைத்து பேசும்போது, “இந்தியாவின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர் தெரசா. அவரது அர்ப்பணிப்புகள், சேவைகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தெரசாவின் கண்காட்சி ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள், விளக்கங்கள் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்,” என்றார்.


எட்டாவது பிளாட்பாரத்தில் கண்காட்சி ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. காலை 8 முதல் மாலை 6 மணி வரை பார்க்கலாம்; அனுமதி இலவசம். இன்று (28ம் தேதி)மாலை 6 மணிக்கு மேல் மதுரையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us