தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலையில் இந்திய வேதிப் பொறியாளர்கள் கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலையில் இந்திய வேதிப் பொறியாளர்கள் கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலையில் இந்திய வேதிப் பொறியாளர்கள் கருத்தரங்கம்


UPDATED : டிச 28, 2010 12:00 AM

ADDED : டிச 28, 2010 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2010 12:00 AM ADDED : டிச 28, 2010 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இந்திய வேதிப் பொறியாளர்கள் 63வது ஆண்டு கருத்தரங்கு துவங்கியது.


அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதிப் பொறியியல் துறை மற்றும் வேதிப் பொறியாளர்கள் அமைப்பு நெய்வேலி மையம் இணைந்து. இந்திய வேதிப் பொறியாளர்களின் 63வது ஆண்டு மூன்று நாள் கருத்தரங்கு நடத்துகிறது. கருத்தரங்கின் துவக்க விழா நேற்று பல்கலையில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடந்தது.


பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்து வேதிப் பொறியியல் கண்காட்சியை திறந்து வைத்தார். பேராசிரியர் பைரவன் வரவேற்றார். பொறியியல் புல முதல்வர் பழனியப்பன் வாழ்த்திப் பேசினார். சென்னை கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிர்வாக இயக்குனர் கோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட வேதிப் பொறியாளர்கள், உயிர் வேதிப் பொறியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அண்ணாமலைப் பல்கலை பதிவாளர் ரத்தின சபாபதிக்கு ஐ.ஐ.சி.எச்.,ன் உயரிய கவுரவ விருது மற்றும் வேதிப் பொறியியல் வல்லுனர்கள் 50 பேருக்கும் விருது வழங்கப்பட்டது. எல்.என்.டி., நிர்வாக இயக்குனர் வெங்கட்ரமணன், பேராசிரியர் காமத் நினைவு உரை நிகழ்த்தினார்.


நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக அமைச்சர் சுவாமிநாதன், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிவக்குமார், கணபதி, செனட் உறுப்பினர்கள் துறைத் தலைவர்கள் பி.ஆர்.ஒ., செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேதிப் பொறியியல் துறைத் தலைவர் விருத்தகிரி நன்றி கூறினார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us