காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் வகுப்பறைகள் கட்டப்படுமா?
காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் வகுப்பறைகள் கட்டப்படுமா?
UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
செஞ்சி: மேலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி பாதியில் நின்றதால் புதிய கட்டடம் பொது கழிப்பிடமாக மாறி வருகிறது.
மேல்மலையனுõர் ஒன்றியம் மேலச்சேரியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியை 1967ல் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைத்தார்.
பள்ளியின் பல கட்டடங்கள் பள்ளி துவங்கிய போது கட்டியவை. இந்த கட்டடங்கள் தற்போது வலுவிழந்து காணப்படுகிறன. புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ரூ. 6.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில் கடந்த ஆண்டு மூன்று வகுப்பறைகள் கட்ட பணிகள் துவங்கின. ஆனால் இது வரை புதிய கட்டட கட்டுமான பணிகள் முடியவில்லை. தளம் ஒட்டும் அளவுக்கு வேலைகள் நடந்துள்ளன.
பல மாதங்களாக பணிகள் நடக்காமல் இருப்பதால் கழிப்பிடமாக மாறிவருகின்றன. இந்த பள்ளியின் பழைய கட்டங்கள் வலுவிழந்து வரும் நிலையில் புதிய கட்டங்களை விரைவாக கட்டி முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.