தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூளையின் மத்திய பகுதியை பயன்படுத்தும் செஸ் நிபுணர்கள்

மூளையின் மத்திய பகுதியை பயன்படுத்தும் செஸ் நிபுணர்கள்

மூளையின் மத்திய பகுதியை பயன்படுத்தும் செஸ் நிபுணர்கள்


UPDATED : ஜன 22, 2011 12:00 AM

ADDED : ஜன 22, 2011 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2011 12:00 AM ADDED : ஜன 22, 2011 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஸ் விளையாட்டின் நிபுணர்கள் மூளையின் மத்திய பகுதியையும், பயிற்சியற்ற ஆட்டக்காரர்கள் மூளையின் பின்பகுதியையும் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.


ஜப்பான் நாட்டின் ரிகென் மூளை அறிவியல் நிறுவனத்தின் உள்ளார்ந்த மூளை இயக்க ஆய்வகத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில், செஸ் விளையாட்டின்போது மூளையின் செயல்பாடு பற்றி பல சுவாரஸ்யமான அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. செஸ் விளையாட்டை போன்றே ஜப்பானில் விளையாடப்படும் &'ஷோகி&' என்ற விளையாட்டை மையமாக வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நிபுணத்துவம் பெற்ற ஆட்டக்காரர்கள், சிறப்பான, கெட்டிக்காரத்தனமான மற்றும் சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள தங்கள் மூளையின் இரண்டு பகுதிகளை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.


சாதாரண ஆட்டக்காரர்கள், மூளையின் &'பெரைடல் லோப்&' பகுதியை பயன்படுத்துகிறார்கள். அதேசமயம் நிபுணத்துவ ஆட்டக்காரர்கள், மூளையின் மையப்பகுதியிலுள்ள &'காடேட் நியூக்ளியஸ்&' என்ற என்ற பகுதியை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் நிபுணத்துவம் பெற்ற ஆட்டக்காரராக மாற, 10௦ வருடங்களுக்கு, குறைந்தது தினமும் 10 மணி நேரங்கள் கடும் பயிற்சி செய்கிறார்கள். இத்தகைய கடும் பயிற்சியின் மூலம், விளையாட்டிற்கான மூளையின் செயல்திறன் &'செரிப்ரல் கார்டெக்ஸ்&' என்ற பகுதியிலிருந்து &'காடேட் நியூக்ளியஸ்&' என்ற பகுதிக்கு மாறியிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த &'காடேட் நியூக்ளியஸ்&' பகுதிதான் உடலின் நகர்வுகளை மாற்றுகின்றன என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். எலி வகைகளில் இந்த &'காடேட் நியூக்ளியஸ்&' நன்கு மேம்பட்டுள்ளது. மேலும் மூளையின் இந்த பாகம்தான், மனிதனின் மூதாதை விலங்குகளில் நன்கு மேம்பட்டு இருந்தது. &'ஷோகி&' விளையாட்டை விளையாடும் நிபுணர்கள் தங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த, மூளையின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆரம்பகட்ட ஆய்வானது, மூளை பாகங்களைப் பற்றிய பல மேல்மட்ட ஆய்வுகளைத் தூண்டும் என்று நம்புவதாக ஜப்பானிய ஆய்வக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us