தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் பட்டம் பெற்ற ஆறரை வயது சிறுவன்

இக்னோவில் பட்டம் பெற்ற ஆறரை வயது சிறுவன்

இக்னோவில் பட்டம் பெற்ற ஆறரை வயது சிறுவன்


UPDATED : மார் 29, 2011 12:00 AM

ADDED : மார் 29, 2011 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2011 12:00 AM ADDED : மார் 29, 2011 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு


வெறும் ஆறரை வயது நிரம்பிய ஒரு சிறுவன், இக்னோ பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றுள்ளான்.


இக்னோ நடத்தும் கைவினை மற்றும் வடிவமைப்பு(கிராப்ட் மற்றும் டிசைன் ) படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறும் தகுதியை அடைந்ததன் மூலம், இக்னோ பல்கலையின் இளம் பட்டதாரி என்ற சாதனையை செய்துள்ளான். இக்னோ பல்கலையின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு நடத்திய கிராப்ட் மற்றும் டிசைன் தேர்வில் 76% மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து, இக்னோ பல்கலை உட்பட பலரது பாராட்டை பெற்றுள்ள அந்த ஆறரை வயது சிறுவனின் பெயர் திவ்ய பிரகாஷ் பாண்டே.


இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தற்போது டெல்லியில் வசித்து வருகிறான். மிக இளம் வயதில் ஒரு பல்கலை பட்டம் பெற்ற சாதனையாளர் வரிசையில் இந்த சிறுவன்தான் முதலிடம் பெறுகிறான். கைவினை மற்றும் வடிவமைப்பில் பால பருவத்தில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்ததால் முறையான பயிற்சியின் மூலம் இந்த சாதனையை அவன் நிகழ்த்தியுள்ளான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us