தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க ஸ்டான்போர்ட்-இந்திய மருத்துவமனை கல்வி ஒப்பந்தம்

அமெரிக்க ஸ்டான்போர்ட்-இந்திய மருத்துவமனை கல்வி ஒப்பந்தம்

அமெரிக்க ஸ்டான்போர்ட்-இந்திய மருத்துவமனை கல்வி ஒப்பந்தம்


UPDATED : மார் 30, 2011 12:00 AM

ADDED : மார் 30, 2011 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2011 12:00 AM ADDED : மார் 30, 2011 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் மெடிக்கல் சென்டரும், மும்பையிலுள்ள ஜாஸ்லாக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


மருத்துவ சேவைகள் மற்றும் பயிற்சியில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்டான்போர்ட் பேராசிரியர்களின் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். மேலும் பின்னாளில் இந்த ஒப்பந்தம் விரிவடையும்போது, ஜாஸ்லாக் மருத்துவர்கள், அமெரிக்கா முழுவதிலுமுள்ள ஸ்டான்போர்ட் மருத்துவமனைகளுக்கும், ஸ்டான்போர்டுடன் இணைக்கப்பட்ட மருத்துவ மனைகளுக்கும் ஜாஸ்லாக் மருத்துவர்கள் சென்றுவர முடியும்.


எனவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜாஸ்லாக் மருத்துவர்கள், மருத்துவம் தொடர்பாக சிறந்த பயனை அடைவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜாஸ்லாக் மருத்துவமனையுடன் எதிர்காலத்தில் வெவ்வேறு துறையில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us