UPDATED : மார் 30, 2011 12:00 AM
ADDED : மார் 30, 2011 04:47 PM
பிடிலைட் இண்டஸ்ட்ரியும், இன்ஸ்டிடியூட் ஆப் கெமிகல் டெக்னாலஜி (ஐ.சி.டி) நிகர்நிலை பல்கலைக்கழகமும் இணைந்து பி.எச்டி மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறது.
'பிடிலைட் - பேராசிரியர் எம்.எம்.ஷர்மா ஆராய்ச்சிக்கான உதவித் தொகை' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 4 மாணவர்களை தேர்வு செய்து உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இந்த உதவித் தொகைக்காக சுமார் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில் இருந்து ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் 30,000௦௦௦ ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும். இதில்லாமல் மாநில அரசு சார்பில் மாதம் தோறும் ரூ. 23,400 கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.
மத்திய மும்பையின் மடுங்கா என்னும் இடத்தில் நடந்த ஆண்டு விழாவில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.சி.டி நிகர்நிலை பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. விழாவில் ஐ.சி.டி. இயக்குனரும், பல்கலைக்கழக துணை வேந்தருமான பேராசிரியர். ஜி.டி யாதவ் கூறுகையில், உதவி தொகை வழங்க படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.
