தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் அறிவியலைப் படிக்க வேண்டும்

மாணவர்கள் அறிவியலைப் படிக்க வேண்டும்

மாணவர்கள் அறிவியலைப் படிக்க வேண்டும்


UPDATED : மார் 30, 2011 12:00 AM

ADDED : மார் 30, 2011 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2011 12:00 AM ADDED : மார் 30, 2011 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய விண்வெளிக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஜனார்த்தன் எத்யா இந்திய மாணவர்கள் மீண்டும் அறிவியல் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மணிப்பாலில் சமீபத்தில் நடைபெற்ற அறிவியல் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதை கூறியுள்ளார்.


நமது சுதந்திரத்திற்குப் பின் அறிவியலுக்கு நாம் கொடுத்து வந்த முக்கியத்துவத்தால் மட்டுமே நம்மால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கடந்த ஆண்டுகளில் பெற முடிந்துள்ளது என்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பதே அறிவியலுக்குத் தரப்பட்ட முன்னேற்றத்தின் விளைவு தான் என்றும் அவர் கூறினார்.


பசுமைப் புரட்சியும் எல்.சி.ஏ., எனப்படும் இலகுரக விமான கண்டுபிடிப்பும் அறிவியலின் நேரடி பயன் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனினும் கடந்த சில ஆண்டுகளில் ஐ.டி., மட்டுமே நமது மாணவர்கள் அடைய விரும்பும் இலக்காக இருப்பதாகவும் இது சரியான போக்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.


அடுத்த 20 ஆண்டுகளில் நாம் நமது தற்போதைய வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்பினால், அறிவியல் படிப்பது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பியூர் சயின்ஸ் எனப்படும் அடிப்படை அறிவியலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இது பற்றி நமது அறிவியல் கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் கல்வியாளர்களும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையே ஜனார்த்தன் எத்யாவின் உரை எடுத்துக்காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us