தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலப் புலமை தேர்வில் சீனாவிற்கு நிகராக இந்தியா

ஆங்கிலப் புலமை தேர்வில் சீனாவிற்கு நிகராக இந்தியா

ஆங்கிலப் புலமை தேர்வில் சீனாவிற்கு நிகராக இந்தியா


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கில மொழிப் புலமையில் ஆசிய நாட்டு மக்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பது குறித்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.


இதில், சீனா மிகவும் பின்தங்கிய இடத்தில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. தற்போது, சீனாவிற்கு சற்று புள்ளிகள் வித்தியாசத்திலேயே இந்தியா இடம்பிடித்துள்ளதாக ஆச்சரியம் தரும் செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக, ஆங்கிலம் அதிக மக்களால் பேசப்படும் நாடாகவும், பல்வேறு ஆங்கில மொழிகளை எளிதாக கையாளும் திறன் இந்தியர்களுக்கு உண்டு என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வாறு இந்தியர்கள் ஆங்கில மொழிப் புலமையில் பின்தங்கியிருப்பதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும் அளிக்கிறது.


எஜுகேஷன் பர்ஸ்ட் இங்கிலீஷ் ப்ரோவிசியென்சி இன்டெக்ஸ் 2011 அறிக்கையில், இந்தியாவும், சீனாவும் சரியாக எந்த இடத்தைப் பிடித்துள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.


எஜுகேஷன் பர்ஸ்ட் என்ற சர்வதேச மையம், சுமார் 2.3 மில்லியன் பணியாற்றும் நபர்களிடம் கடந்த 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.


இந்த ஆய்வு, உலக நாடுகளில் ஆங்கில அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை அறியும் வகையில் அமைந்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us