sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவை அண்ணா பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,

/

கோவை அண்ணா பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,

கோவை அண்ணா பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,

கோவை அண்ணா பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,


UPDATED : ஆக 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை அண்ணா பல்கலையின் கீழ் எட்டு மாவட்டங்களில் 101 இன்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 30 கல்லூரிகள், அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பல்கலையிடம் நடப்பு நிதியாண்டில் அனுமதி பெற்றவை.
பல்வேறு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து கலை அறிவியல் படிப்புக்களை துவக்க அனுமதி வேண்டுமென, கோவை அண்ணா பல்கலைக்கு, கல்லூரிகள் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு, பல்கலை ஆட்சிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதை பரிசீலித்த பல்கலையின் ஆட்சிக்குழு,  இணைப்புக்கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., படிப்புக்களை நடத்த, அனுமதி அளித்தது. புதிதாக அனுமதி பெற்ற 30 கல்லூரிகள் தவிர,  மீதியுள்ள 71 கல்லூரிகளில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., படிப்புக்களை நடத்த முடியும். இதற்கான கடிதத்தை, அண்ணா பல்கலை பதிவாளர் பழனிச்சாமி, அனைத்து  அங்கீகாரம் பெற்ற இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில்,  கூறப்பட்டுள்ளதாவது:
கலை அறிவியல் படிப்புக்களை துவக்க விரும்பும் கல்லூரிகளுக்கு மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு இன்ஜினீயரிங் கல்லூரி அதிகபட்சம் ஐந்து கலை அறிவியல் பாடப்பிரிவுகளை (பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., சேர்த்து) மட்டுமே துவக்க முடியும். பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி.,யில் தலா மூன்று பாடங்கள் துவக்க அனுமதியில்லை.
இந்த படிப்புக்களை நடத்துவதற்கென, தனி உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., படிப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,  2013-14ம் கல்வியாண்டுக்குப்பின், தொடர்ந்து கலை அறிவியல் படிப்புக்கள் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள இன்ஜி., கல்லூரிகள், அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை  இயக்குனர் (அங்கீகாரம்), அண்ணா பல்கலை, கோவை என்ற முகவரிக்கு ஆக.,20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.சி.,யில் அனுமதிக்கப்பட்டுள்ள படிப்புக்கள்:
கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜி., ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, ஏரோ ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் டெக்னாலஜி, அப்பேரல் அன்ட் பேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஏவியேஷன் மெயின்டெனன்ஸ் டெக்னாலஜி, ஏவியேஷன் டெக்னாலஜி, பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங், டேட்டா மைனிங் அன்ட் டேட்டா வேர்ஹவுசிங், பேஷன் அப்பேரல் மேனுபேக்சரிங் அன்ட் மெர்சன்டைசிங் டெக்னாலஜி, ஹார்டுவேர் அன்ட் நெட்வொர்க்கிங், மல்டிமீடியா அன்ட் கம்யூனிகேஷன், மல்டிமீடியா அன்ட் விஷூவல் கம்யூனிகேஷன், மல்டிமீடியா அனிமேஷன், நாட்டிக்கல் டெக்னாலஜி, வெப் மைனிங் அன்ட் டிசைனிங்.
எம்.எஸ்.சி.,யில் அனுமதிக்கப்பட்டுள்ள படிப்புக்கள்:
கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி (2 ஆண்டுகள்), சாப்ட்வேர் இன்ஜி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி (5 ஆண்டுகள்), இன்பர்மேஷன் டெக்னாலஜி (5 ஆண்டுகள்), சாப்ட்வேர் இன்ஜி., (5 ஆண்டுகள்), பயோ டெக்னாலஜி (2 ஆண்டுகள்), பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங், டேட்டா மைனிங் அன்ட் வேர் ஹவுசிங், ஹார்டுவேர் அன்ட் நெட்வொர்க்கிங், இன்டர்நெட் அப்ளிகேஷன்ஸ், மல்டிமீடியா அன்ட் விஷூவல் கம்யூனிகேஷன், மல்டிமீடியா அனிமேஷன், விஷூவல் கம்யூனிகேஷன், வெப் டிசைனிங்.






      Dinamalar
      Follow us