தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரக திறனாய்வு தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு உதவித்தொகை

ஊரக திறனாய்வு தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு உதவித்தொகை

ஊரக திறனாய்வு தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு உதவித்தொகை


UPDATED : ஏப் 28, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகர்: தமிழகத்தில் ஊரக திறனாய்வு தேர்வில், மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊரகப்பள்ளிகளில் படித்து, 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், மாவட்டம் தோறும், 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி படிப்பில் இருந்து, தொழில் நுட்ப படிப்புக்கு சென்றாலோ, இடை நிற்றல் இருந்தாலோ உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும்.


கடந்த 2010, நவம்பரில் நடந்த திறனாய்வு தேர்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தேர்வு பெற்றவர்கள், பள்ளி தலைமையாசிரியர்களை அணுகி கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us