தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளரிகல் பணி அறிவிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளரிகல் பணி அறிவிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளரிகல் பணி அறிவிப்பு


UPDATED : மே 03, 2011 12:00 AM

ADDED : மே 03, 2011 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2011 12:00 AM ADDED : மே 03, 2011 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத் துறை வங்கிகளில்
ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி பி.என்.பி., என்று சுருக்கமாக அனைவராலும் அறியப்படுகிறது. நாடு தழுவிய கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் ஒற்றைச் சாளர முறையில் வங்கிச் சேவைகளைத் தந்திடும் 6428 கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.


இந்தக் காலி இடங்களில் தமிழ் நாட்டில் மொத்தம் 140 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாம் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத் திறனாளிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்கள் அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபரேடிங் சிஸ்டத்தில் பணியாற்றும் திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.


விண்ணப்பக் கட்டணம்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., வகுப்பினர் ரு.300/ ஐ ஏதாவது ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கியின் கேஷ் கவுண்டரில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. பணத்தைச் செலுத்துவதற்கான சலானை பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளரிகல் பதவிக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள ஒரு பிரத்யேகமான இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். ஆன்லைனில் விபரங்களை முழுமையாகப் பதிவு செய்த பின் உங்களுக்கான பதிவு எண்ணும், அதற்கான பாஸ்வேர்டும் வழங்கப்படும்.


இதனை பத்திரமாக வைத்திருக்கவும். இதனை உபயோகித்தே இந்தத் தேர்வின் மற்ற விபரங்களையும், தேர்வு முடிவுகளையும் அறிய முடியும். ஆன்லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் போதுமான காப்பிகள் எடுத்து பத்திரப்படுத்தவும்.


இந்தப் பிரிண்ட் அவுட்டையும், தேர்வுக் கட்டணம் செலுத்திய டிரான்சாக்சன் ஐ.டி.,யுடன் கூடிய சலானையும் எழுத்துத் தேர்வின் போது எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை அறிய கட்டாயம் இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து அறியவும்.


தேர்ச்சி முறை
இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் மற்றும் டெஸ்கிரிப்டிவ் வகையில் கேள்விகள் இருக்கும்.


அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், குவாண்டிடேடிவ் ஆப்டியூட், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ், டெஸ்ட் ஆப் மார்க்கெடிங் அண்டு கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். டெஸ்கிரிப்டிவ் தேர்வு ஆங்கில மொழியறிவை அறியும் விதத்தில் நடத்தப்படும். 19.06.2011 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் எழுதலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.05.2011
எழுத்துத் தேர்விற்கான அழைப்பு கிடைக்கும் நாள்: 23.05.2011 முதல் 06.06.2011க்குள் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 19.06.2011
இணைய தள முகவரி:
www.pnbindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us