UPDATED : மார் 28, 2021 12:00 AM
ADDED : மார் 28, 2021 09:18 PM
சென்னை:
கட்டட அமைப்பியல் படிப்புக்கான, &'நாட்டா&' நுழைவு தேர்வுக்கு, வரும், 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய ஆர்கிடெக்சர் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டட அமைப்பியல் படிப்பான, பி.ஆர்க்., படிப்பில் சேர, ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்தும், நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நாட்டா நுழைவு தேர்வு, ஏப்., 10, ஜூன், 12 என, இரண்டு முறை நடத்தப்படுகிறது.
முதல் முறை தேர்வுக்கு, ஆன்லைன் பதிவு ஏற்கனவே துவங்கியுள்ளது. வரும், 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். &'பி.ஆர்க்., படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும்; டிப்ளமாவில் கணிதம் கட்டாயமாக படித்திருக்க வேண்டும்&' என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
