தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வராத அரசு பேருந்துகளால் மாணவர்கள் அவதி: 10 ஆண்டாக அரங்கேறும் அவலம்

வராத அரசு பேருந்துகளால் மாணவர்கள் அவதி: 10 ஆண்டாக அரங்கேறும் அவலம்

வராத அரசு பேருந்துகளால் மாணவர்கள் அவதி: 10 ஆண்டாக அரங்கேறும் அவலம்


UPDATED : ஏப் 11, 2013 12:00 AM

ADDED : ஏப் 11, 2013 08:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2013 12:00 AM ADDED : ஏப் 11, 2013 08:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாநகராட்சி, சூரம்பட்டி மண்டலம், 31 வார்டு வில்லரசம்பட்டி நான்கு ரோட்டில் இருந்து, வெப்படைக்கு செல்ல இணைப்பு சாலையாக, 30 அடி அகல தார்சாலை உள்ளன. வில்லரசம்பட்டி நால்ரோட்டை அடுத்து, வில்லரசம்பட்டி, சானார்பள்ளம், தொட்டம்பட்டி, கங்காபுரம், குளத்தப்பாளையம் உள்பட பல கிராமங்கள் உள்ளது.

புதிதாக மாநகராட்சியுடன் இணைந்த பகுதியாக இருந்த போதிலும், இவை கிராமங்களாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இரண்டாயிரம் பேர் வரையிலும் இங்கு வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வகையில் பள்ளிகள் உள்ளன.

ஆறாம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை, திண்டல், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், வெப்படை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில், இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதிக்கு வந்து, டவுன் பஸ்கள் மூலமாக, சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தத்தில் இறங்கி, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.

வெப்படை அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மினிபஸ் மற்றும் சைக்கிள்கள் மூலம் பள்ளிக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் இதே நிலை தான். ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களை இணைத்து தரமான தார் சாலை வசதிகள் அமைத்தும், அரசு, தனியார் டவுன் பஸ் சேவை கிடையாது.

கிராமத்தில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, வில்லரசம்பட்டி நால்ரோடு வரையே, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நால்ரோட்டில் இறங்கி, பல கி.மீ., தூரம் வரை, அவரவர் கிராமங்களுக்கு நடந்து செல்கின்றனர்.

பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, இந்த வழித்தடத்தில், காலை, மாலை நேரத்தில், அரசு டவுன் பஸ்களை இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us