UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 09:48 AM

சென்னை:
சென்னை மாவட்டத்தில், மாணவியருக்கான புதுமை பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்ததாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், புதுமைப்பெண் திட்டத்தில், அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயர்கல்வி முடிக்கும் வரை, மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டம், 2024 - 25ம் கல்வியாண்டு முதல், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதில் மாணவியர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து, உயர்கல்வி முடிக்கும் வரை, வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
எனவே, சென்னை மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி பயிலும் மாணவியரும் பயன் பெறலாம். திட்டத்தில் பயன் பெற, அந்தந்த கல்லுாரியின் சிறப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.