கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில் இமேஜிகா-14 விழா
கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில் இமேஜிகா-14 விழா
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 03:30 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில், இமேஜிகா-14 என்ற விழா திருப்பூரில் நடந்தது.
வித்யாசாகர் கல்லுாரி ரோட்ரேக்ட் கிளப் மற்றும் கிரீன் பீல்டு கிளப்பும் இணைந்து இவ்விழாவினை நடத்தியது. இதில், சிறந்த கிளப் சர்வீஸ், கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட அளவில் அதிகமான கிளப் செயல்முறைகளில் ஈடுபட்டது உட்பட ஒன்பது செயல்பாடுகளுக்கு வித்யாசாகர் கல்லுாரி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.
விருதுபெற்ற கிரீன் பீல்டு மற்றும் ரோட்ரேக்ட் கிளப் மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் ஜெகநாதன், செயலாளர் சத்யநாதன் பாராட்டு தெரிவித்தனர்.
