தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கற்பித்தல் அடிப்படைகள் குறித்த இணைப்பு பயிற்சி

மாணவர்களுக்கு கற்பித்தல் அடிப்படைகள் குறித்த இணைப்பு பயிற்சி

மாணவர்களுக்கு கற்பித்தல் அடிப்படைகள் குறித்த இணைப்பு பயிற்சி


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 03:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 03:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை, திருமூர்த்திமலை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்திலுள்ள தொடக்கக் கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு, கற்பித்தல் அடிப்படைகள் குறித்த இணைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 23ம்தேதி துவங்கப்பட்டது. இதில் கலை, தொழிற்பிரிவு, அறிவியல் என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் மூன்று பிரிவுகளிலும் அடிப்படை அறிவை வளர்க்கும் பொருட்டு, உடுமலை, திருமூர்த்திமலை ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கான இணைப்பு பயற்சி அளிக்கப்படுகிறது.

கணிதம், தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்பிப்பது, இப்பாடங்களிலுள்ள அடிப்படைகளை புரிய செய்தல் போன்றவைக் குறித்து இப்பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. திருமூர்த்திநகர், மற்றும் தளி அரசு பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரலாறு குறித்த அடிப்படைகள், தொழிற்பிரிவினருக்கு, அறிவியல் மற்றும் கலை பிரிவினருக்கு அறிவியல் போன்ற பாடங்களில் பயிற்சி அளிக்கின்றனர்.

திருமூர்த்திமலை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தின் முதல்வர் திருஞானசம்பந்தம் கூறியதாவது: ஆசிரியர்களாக பணிபுரிய இருக்கும் இம்மாணவர்கள், அனைத்து பாடப் பிரிவுகளிலும் அடிப்படைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, யோகா கலை பயற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகள் 23ம் தேதி துவங்கப்பட்டு; 15 நாட்களுக்கு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us