அரசு கல்லூரி விடுதியில் ராகிங்: மாணவர்கள் 15 பேர் இடைநீக்கம்
அரசு கல்லூரி விடுதியில் ராகிங்: மாணவர்கள் 15 பேர் இடைநீக்கம்
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 01:53 PM
திருப்பூர்: திருப்பூர் அரசு கலைக்கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 15 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள மூன்றாமாண்டு மாணவர்கள் 15 பேர், இரண்டாமாண்டு மாணவர்கள் சிலரை ராகிங் செய்து தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் ராகிங் தடுப்புக்குழு உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தனர். ராகிங்கில் ஈடுபட்ட மூன்றாமாண்டு மாணவர்கள் 15 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். க
ல்லூரி முதல்வர் கூறுகையில், "சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் பெற்றோருடன் 15 நாட்களுக்குப் பின் கல்லூரிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
