தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூடலுார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா; 1,620 மாணவர்கள் பங்கேற்பு

கூடலுார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா; 1,620 மாணவர்கள் பங்கேற்பு

கூடலுார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா; 1,620 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : அக் 01, 2026 06:34 PM

ADDED : அக் 01, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:34 PM ADDED : அக் 01, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:
கூடலுார் அரசு கல்லுாரியில் நடந்த, 17 மற்றும் 18வது பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை பிரிவுகளை சேர்ந்த. 1,620 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 17வது (2022 - 23), 18வது (2023 - 24) பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கல்லுாரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்து பேசுகையில், “நமது கல்லுாரி, 14 இளங்கலை, 6 முதுகலை பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

தகுதி வாய்ந்த பேராசிரியர்களுடன் தரமான கல்வியுடன் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. கல்லுாரி படிப்பு முடிந்து பட்டம் பெரும் மாணவர்கள் தங்களின் கல்வி திறன்களை வேலைவாய்ப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், சமூக மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, நடந்த, 17 மற்றும் 18வது பட்டமளிப்பு விழாவில், 1,374 இளங்கலை மாணவர்களுக்கும்; 246 முதுகலை மாணவர்களுக்கும் முதல்வர் பட்டங்களை வழங்கினார்.

மொத்தம், 1,620 மாணவர்கள் பட்டங்களை பெற்று கொண்டனர். விழாவில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு வந்தவர்கள் ஏமாற்றம்...


கூடலுார் அரசு கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 'மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பட்டங்களை வழங்குவார்,' என, தெரிவிக்கப்பட்டது. அவரை வரவேற்க தேவையான பணிகளை, கல்லுாரி நிர்வாகம்; மாணவர்கள் மேற்கொண்டனர்.

மாணவ, மாணவியர் நேற்று காலை அவர் வருகை எதிர்பார்த்து பூங்கொத்துடன் காத்திருந்தனர். ஆனால், அலுவலக பணிகள் காரணமாக விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், விழா ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us