தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 80 சதவீதத்தினர் பெண்கள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 80 சதவீதத்தினர் பெண்கள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 80 சதவீதத்தினர் பெண்கள்


UPDATED : அக் 01, 2026 06:36 PM

ADDED : அக் 01, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:36 PM ADDED : அக் 01, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
80 சதவீதத்தினர் பெண்கள்! திருப்பூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவு பெற தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 3 பேரில், 11 ஆயிரத்து 197 பேர் பெண்கள். ஆண்கள் 2,802 பேர் மட்டுமே; 4 மூன்றாம் பாலினத்தவரும் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட, கல்வி அறிவு பெறாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எழுதப் படிக்க கற்றுத்தருவதுடன், வாழ்வியல் திறன், நிதிசார் அறிவு, மொபைல் போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் அறிவுத்திறன் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் பயனாளிகளை கண்டறியும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 560 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூர் தெற்கு வட்டாரத்தில் மட்டும் 66 மையங்கள் உள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நவம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், ''மாவட்டத்தில் எழுத்தறிவு பெற ஆர்வம் காட்டியவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மொத்தம் 14 ஆயிரத்து 3 பேர் கண்டறியப்பட்டதில், 11 ஆயிரத்து 197 பேர் பெண்கள். ஆண்கள் 2,802 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேரும் திட்டத்தில் இணைந்துள்ளனர்'' என்றார்.

உடுமலை 'டாப்' திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தில், அதிகபட்சமாக உடுமலையில் 1,426 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக குடிமங்கலத்தில் 515 பேர் உள்ளனர்.

திருப்பூர் வடக்கு 1,373, திருப்பூர் தெற்கு 1,371, அவிநாசி 1,273, பல்லடம் 1,240, ஊத்துக்குளி 1,090, தாராபுரம் 1,015, காங்கயம் 987, மடத்துக்குளம் 801, பொங்கலுார் 732, வெள்ளகோவில் 715, மூலனுார் 609, குண்டடம் 556 பேர் என வட்டாரம் வாரியாக பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us