UPDATED : அக் 01, 2026 06:37 PM
ADDED : அக் 01, 2026 06:38 PM
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் 7 நாட்கள் நடந்தது. தலைமையாசிரியை கரோலின் நிர்மலாராணி தலைமை வகித்தார். மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் தீமை குறித்து விழிப்புணர்வு, போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் துவங்கி தீயணைப்பு நிலையத்தில் நிறைவு செய்தனர்.
மாணவ, மாணவிகள் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டுசென்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட குழுவினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி: கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் பெத்தண்ணசாமி தலைமை வகித்தார். ஆசிரியை சிவகுமாரி முன்னிலை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியை கருப்பாயி வரவேற்றார். ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த ஆலோசனை மையத்தின் ஆலோசகர் அந்தோணி பிரான்சிஸ், போதைப்பொருள் பழக்கம் மற்றும் காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குவோம் என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்கள் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர். என்.எஸ்., திட்ட அலுவலர் காஞ்சனாதேவி நன்றி கூறினார்.
