மண் வள அட்டை பரிந்துரை குறித்த 2 நாள் பயிற்சி முகாம்
மண் வள அட்டை பரிந்துரை குறித்த 2 நாள் பயிற்சி முகாம்
UPDATED : ஜன 23, 2021 12:00 AM
ADDED : ஜன 23, 2021 09:35 AM
புதுச்சேரி:
பாகூரில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நீடித்த வேளாண்மைக்கான மண் வள அட்டை பரிந்துரை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பாகூர் வேளாண் அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். முகாமை பாகூர் வட்ட இணை வேளாண் இயக்குனர் பூமிநாதன் துவக்கி வைத்தார். மண் வள அட்டையின் முக்கியத் துவம் குறித்து வேளாண் அலுவலர் அமர்ஜோதி பேசினார்.
நெல், தானியம், எண்ணெய் விதைகளுக்கான ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மண்ணியல் துறை தலைவர் சங்கர், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை பூச்சி, பூஞ்சான் கொல்லிகளின் பங்கு குறித்து வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் மணிமேகலை ஆகியோர் பேசினர்.
இணை வேளாண் இயக்குனர் ராகவன் பங்கேற்று, விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கோபாலசாமி, கிராம களப் பணியாளர்கள் முத்துக்குமரன், செயல் விளக்க பணியாளர் சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
