தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொது தேர்வை ரத்து செய்யக்கோரி பிளஸ் 2 மாணவர்கள் கடிதம்

பொது தேர்வை ரத்து செய்யக்கோரி பிளஸ் 2 மாணவர்கள் கடிதம்

பொது தேர்வை ரத்து செய்யக்கோரி பிளஸ் 2 மாணவர்கள் கடிதம்


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. &'நோய்த் தொற்று குறைந்த பின் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும்&' என, மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட பிளஸ்2 மாணவர்கள், &'ஆப்லைன் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும்&' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: 

எப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாணவர்களை நேரில் வரச் செய்து பொதுத் தேர்வுகளை நடத்துவது பேரழிவை ஏற்படுத்தும் முடிவாக இருக்கும். மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் அல்லது மாற்று மதிப்பீடு உள்ளிட்ட பிற எந்த முறைகள் மூலமாக வேண்டுமானாலும் மதிப்பிடப்படத் தயாராக உள்ளோம்.உச்ச நீதிமன்றம் இதுகுறித்துத் தானாகவே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொரோனா காலகட்டத்தில் ஆப்லைன் முறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்., மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us