UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 01:08 PM

'காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை - 2025' திட்டத்தின் கீழ், யு.கே., கல்வி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் தகுதியுள்ள இந்திய மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன், செப்டம்பர்/அக்டோபர் 2025 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.
* குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள கருப்பொருள்கள்:
* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
* சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்
* புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துதல்
* செழிப்பை வலுப்படுத்துதல் மற்றும் பேரிடருக்கு தீர்வு காணல்
* உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்
* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள்
கல்வி நிறுவனங்கள்:
உதவித்தொகைக்கு தகுதியான யு.கே., கல்வி நிறுவனங்களின் பட்டியலை https://cscuk.fcdo.gov.uk/uk-universities/ என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு:
www.britishcouncil.in/study-uk/scholarships/commonwealth-scholarships