தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டார்ட் அப் திருவிழா - 2026 டில்லி பல்கலையில் துவக்கம்

ஸ்டார்ட் அப் திருவிழா - 2026 டில்லி பல்கலையில் துவக்கம்

ஸ்டார்ட் அப் திருவிழா - 2026 டில்லி பல்கலையில் துவக்கம்


UPDATED : ஜன 10, 2026 11:25 AM

ADDED : ஜன 10, 2026 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 11:25 AM ADDED : ஜன 10, 2026 11:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், டில்லி 'ஸ்டார்ட் அப் யுவா விழா - 2026' டெல்லி மாநில அரசு நேற்று துவக்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், டில்லி மாநில கல்வி அமைச்சர் ஆஷித் சூட் பேசியதாவது:

கடந்த 2014ல் நாடு முழுவதும் 125 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் இருந்தன. ஆனால் இப்போது 1.97 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 45 சதவீத நிறுவனங்களை பெண்களை தலைமை ஏற்று நடத்துகின்றனர். டில்லி முதல்வர் ரேகா குப்தா, இந்த மாநில அரசை மாணவர்களின் ஆராய்ச்சி கேந்திரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்கப்படும் 6 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதுபோல 100 நிறுவனங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆரோக்கியம், உற்பத்தி துறை போன்றவற்றில் 450 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் துவக்க காலத்தில் 5 - 10 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது ஆனால் பின் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கிறது. எனவே மாணவர்கள் தங்கள் சிரமம், கஷ்டத்தை உணர்ந்து புதிய ஸ்டார்ட் அப்களை உருவாக்காமல் இருக்க கூடாது. ஏராளமான நிறுவனங்களை துவக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் வெறுமனே தகுதி வாய்ந்த மாணவர்கள் உருவாக்கும் கேந்திரமாக இல்லாமல் தொழில்முனைவோர் பலரை உருவாக்கும் களங்கலாக மாற வேண்டும். பல ஸ்டார்ட் அப்களுக்கான கரு பல்கலைக்கழகங்களில் வளாகங்கள் ஹாஸ்டலில் இருந்து தான் கிடைக்கின்றன.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us