தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்புக் கட்டணம் ரத்து: பள்ளிகளுக்கு அரசு ரூ.21 கோடி இழப்பீடு

சிறப்புக் கட்டணம் ரத்து: பள்ளிகளுக்கு அரசு ரூ.21 கோடி இழப்பீடு

சிறப்புக் கட்டணம் ரத்து: பள்ளிகளுக்கு அரசு ரூ.21 கோடி இழப்பீடு


UPDATED : டிச 02, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் சேர்க்கைக்கான சிறப்புக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


அரசு, அரசு நிதியுதவி பெறும் தமிழ், ஆங்கில வழிப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் பள்ளிகள் வசூலித்து வந்த சிறப்புக் கட்டணத்தை இந்த ஆண்டு முதல் அரசு ரத்து செய்துள்ளது.


இதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில் சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த தொகையிலிருந்து பள்ளிகள் அரசுக்கு செலுத்தி வந்த சேர்க்கை, விளையாட்டுக் கட்டணத்தை இனி செலுத்த வேண்டியதில்லை.  இந்த ஆண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிட்டு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தலா ஒருவருக்கு 29 ரூபாயும் 9,10ம் வகுப்புகளுக்கு 41 ரூபாயும் வழங்க வேண்டும்.
11,12ம் வகுப்புகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கு 93 ரூபாயும் தொழிற்கல்வி பிரிவிற்கு 83 ரூபாயும் கலைப் பிரிவிற்கு 63 ரூபாயும் வழங்க வேண்டும்.
இதுகுறித்து முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us