ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
UPDATED : டிச 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிரபல இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார்.
நாட்டின் பழமைவாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஸ்சி., விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டு, நூறு ஆண்டுகளாவதை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஓராண்டு காலத்திற்கு இக்கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் டிச. 3ம் தேதி துவக்கி வைக்கிறார். மேலும் அவர் நூற்றாண்டு விழா கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
