தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவள்ளுவர் பல்கலை ஆவணங்கள் எரிப்பு: ஊழியர்கள் 25 பேரிடம் போலீஸ் விசாரணை

திருவள்ளுவர் பல்கலை ஆவணங்கள் எரிப்பு: ஊழியர்கள் 25 பேரிடம் போலீஸ் விசாரணை

திருவள்ளுவர் பல்கலை ஆவணங்கள் எரிப்பு: ஊழியர்கள் 25 பேரிடம் போலீஸ் விசாரணை


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூர்: வேலூர், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறையில் ஆவணங்களை எரித்த வழக்கில், பல்கலை ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, 25 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலையின் துணைவேந்தராக குணசேகரன் உள்ளார். நேற்று முன்தினம், துணைவேந்தர் அறையை உடைத்த மர்ம நபர்கள், முக்கிய ஆவணங்களை தீ வைத்து எரித்ததோடு, 25 ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

துணைவேந்தர் நாற்காலியில் கத்தி வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பல்கலையில் பணிபுரியும், சில தற்காலிக பணியாளர்கள், இதில் சம்பந்தப்பட்டிருந்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

ஊழியர், அலுவலர்களின் கை ரேகைகளை சேகரிக்க, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்வதாக போலீசார் எச்சரித்ததால் வேறு வழியின்றி ஊழியர்கள் சம்மதித்தனர். இரு நாட்களாக பல்கலையில் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட ஊழியர், அலுவலர்கள், தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் கை ரேகைகள், பதிவு செய்யப்பட்டன.

அறையில் எடுக்கப்பட்ட கைரேகை, தற்காலிக ஊழியர் சிலரின் கை ரேகையுடன் ஒத்துப்போனது தெரிந்ததை அடுத்து, 25 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து பல்கலை வேந்தரும், கவர்னருமான ரோசய்யாவுக்கு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எரிக்கப்பட்ட ஆவணங்களுக்கு பதில் புதிய ஆவணங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. காணாமல் போன 25 ஆவணங்களை கண்டுபிடிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us