தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வி மாணவிக்கு நர்சிங் கவுன்சிலிங் அனுமதி மறுப்பு:சுகாதார செயலாளர் ஆஜராக உத்தரவு

தொழிற்கல்வி மாணவிக்கு நர்சிங் கவுன்சிலிங் அனுமதி மறுப்பு:சுகாதார செயலாளர் ஆஜராக உத்தரவு

தொழிற்கல்வி மாணவிக்கு நர்சிங் கவுன்சிலிங் அனுமதி மறுப்பு:சுகாதார செயலாளர் ஆஜராக உத்தரவு


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிளஸ் 2 தொழிற்கல்வி படித்த மாணவியை நர்சிங் பட்டயப்படிப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராஜபாளையம் ராஜன் தாக்கல் செய்த மனு: எனது மகள் பானுப்பிரியா. பிளஸ் 2 நர்சிங் (தொழிற்கல்வி) படிப்பில் 1200 க்கு 1023 மதிப்பெண் பெற்றார். நர்சிங் பட்டயப்படிப்பிற்கு (டிப்ளமோ) விண்ணப்பித்தார். இதற்கு தகுதிகளாக பிளஸ் 2 வில் தமிழை முதன்மை பாடம், ஆங்கிலத்தை 2 வது மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்.

பிற்பட்டோர், இதர பிரிவு மாணவர்கள் 40 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 35 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். நர்சிங் பட்டயப்படிப்பிற்கான கவுன்சிலிங் செப்.,16 முதல் 18 வரை நடந்தது.

என்னை அனுமதிக்கவில்லை

மருத்துவக் கல்வி இயக்குரனக தேர்வுக்குழு செயலாளர், "பிளஸ் 2வில் அறிவியல் பாடம் படித்திருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்" என்றார். விதிகள்படி தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு, நர்சிங் பட்டயப்படிப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். நர்சிங் பட்டயப்படிப்பு கவுன்சிலிங் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.கே.கண்ணன் ஆஜரானார். நீதிபதி: பிளஸ் 2 வில் நர்சிங் தொழிற்கல்வி பாடப்பிரிவை அரசு அங்கீகரித்துள்ளது. ஆனால் தாவரவியல், விலங்கியல் படித்தவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனக்கூறி, மனுதாரரின் மகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை மறுப்பது சரியல்ல.

இதுபோன்ற முக்கியமான பொதுநலன் சார்ந்த வழக்குகளில் கோர்ட் உத்தரவிட்டும், உயரதிகாரிகள் ஆஜராவதில்லை. இதனால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநில சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளர் செப்.,23 ல் ஆஜராகி விளக்கமளிப்பர் என எதிர்பார்க்கிறேன். இல்லாத பட்சத்தில், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இதை உத்தரவாக பிறப்பிக்க விரும்பவில்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us