தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; மே 25ல் வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; மே 25ல் வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; மே 25ல் வெளியீடு


UPDATED : மே 24, 2016 12:00 AM

ADDED : மே 24, 2016 08:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2016 12:00 AM ADDED : மே 24, 2016 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலும், வெளியிட்ட செய்தி குறிப்பில்: 


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது. சுமார், 10 லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வு முடிவுகள் நாளை 09.31 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும். 

மாணவர்கள், பொது நூலகங்களில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, பள்ளி தகவல் பலகையில் தேர்வு முடிவுகளை ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தேர்வர்கள் தங்களது பதிவென் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 
இணையதளங்கள் 
  • www.tnresults.nic.in 
  • www.dge1.tn.nic.in 
  • www.dge2.tn.nic.in 
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
 

01.06.2016 முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவென் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். 


மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை 

மார்ச் மற்றும் ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். 

மார்ச் மற்றும் ஏப்ரல் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 25.05.2016 (புதன்கிழமை) முதல் 28.05.2016 (சனிக்கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். 


மறுகூட்டல் கட்டணம் 


பகுதி – I மொழி - ரூ.305/- 
பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- 
பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் - ரூ.205/- 
பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- 

கட்டணம் செலுத்தும் முறை
 
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும். 

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் மற்றும் ஜூலை 2016 மார்ச் மற்றும் ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் மற்றும் வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. 

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us