தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 36 வீரர், வீராங்கனைகள் சாம்பியன்

சென்னை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 36 வீரர், வீராங்கனைகள் சாம்பியன்

சென்னை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 36 வீரர், வீராங்கனைகள் சாம்பியன்


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வள்ளலார் நகர்: சென்னை மாவட்ட அளவிலான, சிலம்ப போட்டியில், 36 வீரர், வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சென்னை மாவட்ட சிலம்ப சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ஸ்டான்லி மருத்துவமனை எதிரே உள்ள பெரன்ஸ் மைதானத்தில் நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சப்-ஜூனியர் ஆண்களில், 20 கிலோ முதல், 50 கிலோ வரையிலான ஐந்து வகை எடை பிரிவுகளில், ராமகிருஷ்ணன், விஷ்ணு, மோகனகண்ணன், பிரவீன், லோகநாதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

பெண்களில், 20 கிலோ முதல், 50 கிலோ வரையிலான, ஐந்து எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அதில், தரணி இரட்டை சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் கிருத்திகா, சங்கீதா, பர்ஷனா முதலிடம் பிடித்தனர். ஜூனியர் ஆண்களில், 20 கிலோ முதல், 80 கிலோ வரை, ஆறு எடைபிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

அதில், லாரன்ஸ், குமரன், சரவணன், வினித்குமார், கிஷோர், ஆகாஷ், சந்தோஷ், சஜித் ஆகாஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பெண்களில், 20 கிலோ முதல், 80 கிலோ வரையிலான எடை பிரிவுகளில், கீர்த்தனா, விவேதா பிரியா, மாதங்கி, தமிழரசி, பூவரசி, சுவர்ணமால்யா, ரம்யாபாரதி, கண்மணி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சீனியர்

ஆண்களில், 40 கிலோ முதல், 80 கிலோ எடைபிரிவில் போட்டிகள் நடந்தன. அதில், முகமத் சுலைமான், கணேஷ்குமார், சிவநேசன், கிருஷ்ணகுமார், சந்தீப்குமார் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். பெண்களில், 30 கிலோ முதல் 80 கிலோ எடைப்பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. அதில், எஸ்.தமிழரசி, பிரியா, ஹசீனா, மைதிலி, மோகஷினா, நித்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அவர்கள், கரூரில் நடக்க உள்ள மாநில அளவிலான, சிலம்ப போட்டியில் பங்கேற்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us