தர்மபுரியில் டி.என்.பி.எஸ்.சி., கூட்டு தொழில்நுட்ப தேர்வில் 706 பேர் ஆப்சென்ட்
தர்மபுரியில் டி.என்.பி.எஸ்.சி., கூட்டு தொழில்நுட்ப தேர்வில் 706 பேர் ஆப்சென்ட்
UPDATED : நவ 16, 2026 03:41 PM
ADDED : நவ 16, 2026 03:41 PM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., கூட்டு தொழில்நுட்ப தேர்வில், 706 பேர் 'ஆப்சென்ட்' ஆனார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேரடி நியமனம், கூட்டு தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வு, தர்மபுரி மாவட்டத்தில், 6 தேர்வு மையங்களில் நேற்று காலை, 9:30 மணி முதல், மதியம், 12:30 மணி வரை நடந்தது.
தேர்வுவெழுத, 1,886 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 706 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 1,180 பேர் தேர்வெழுதினர். தேர்வர்களின் வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் பார்வையிட்டார்.
