தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தில் 77,087 பேர் பயன்

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தில் 77,087 பேர் பயன்

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தில் 77,087 பேர் பயன்


UPDATED : செப் 23, 2026 06:01 PM

ADDED : செப் 23, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 06:01 PM ADDED : செப் 23, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, தர்மபுரி மாவட்ட கலெக் டர் சரவணன், நேற்று தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில், 225 அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 34,574 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில், 817 தொடக்கப் பள்ளிகளில், 28,854 மாணவ, மாணவியர், 310 நடுநிலைப் பள்ளிகளில், 25,236 மாணவர்கள், 123 உயர்நிலைப் பள்ளிகளில், 9,326 மாணவர்கள், 102 மேல்நிலைப் பள்ளிகளில், 13,671 என மொத்தம், 1,352 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 77,087 மாணவ, மாணவியர் பயனடைகின்றனர்.

நேற்று, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, மாவட்ட கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்து, 150 மாணவர்களுக்கு காலை உணவாக வெண்பொங்கல், காய்கறி சாம்பாருடன் இனிப்பு பொங்கல் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, மகளிர் திட்டம் இணை இயக்குனர் திட்ட இயக்குனர் முத்துக்குமாரசுவாமி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுமதி, நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் கோவிந்தசாமி, குமரேசன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us