பி.இ., - பி.டெக்., சேர்க்கை: 79 ஆயிரம் இடங்கள் காலி
பி.இ., - பி.டெக்., சேர்க்கை: 79 ஆயிரம் இடங்கள் காலி
UPDATED : ஜூலை 31, 2013 12:00 AM
ADDED : ஜூலை 31, 2013 08:01 AM
கடந்த ஜூன், 21ம் தேதியில் இருந்து, 26ம் தேதி வரை, பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வு அனைத்தும் முடிந்த நிலையில், இறுதி காலியிட விவரங்களை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பி.இ., - பி.டெக்., சேர்க்கையில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 455 இடங்கள் நிரம்பி உள்ளதாகவும், 79,008 இடங்கள் காலியாக உள்ளதாகவும், அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பி.ஆர்க்., படிப்புக்கு, 1,383 இடங்கள் நிரம்பி உள்ளன என்றும், 295 இடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
பி.ஆர்க்., காலி இடங்களையும் சேர்த்து, மொத்தம், 79,303 இடங்கள் நிரம்பவில்லை என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள், நாளை துவங்குகின்றன. கல்லூரியில், "ராகிங்" போன்ற எவ்வித சம்பவங்களும் நடக்காத வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, பல்கலை எடுத்துள்ளது.
சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில், "ராகிங்" எதிர்ப்பு வாகனம், ரோந்து வர, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், "ராகிங்"கில் ஈடுபட்டால், என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்தும், கல்லூரி வளாகத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதேபோல், தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க, பல்கலை அறிவுறுத்தி உள்ளது.