தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சரியான நேரத்தில் இலவச சீருடை கிடைக்குமா?

சரியான நேரத்தில் இலவச சீருடை கிடைக்குமா?

சரியான நேரத்தில் இலவச சீருடை கிடைக்குமா?


UPDATED : மே 09, 2011 12:00 AM

ADDED : மே 09, 2011 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2011 12:00 AM ADDED : மே 09, 2011 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை கட்டுப்பாட்டால், இலவச சீருடை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தங்கள், செயல்படுத்த முடியாத நிலையில், கல்வியாண்டு துவக்கத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதில், சிக்கல் எழுந்துள்ளது.


தமிழக அரசு, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வியாண்டு துவக்கத்தில், இலவச பாடப் புத்தகங்களுடன் சீருடைகளும் வழங்கி வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் துணி நூல் துறை சார்பில், "டெண்டர்" விடப்படும். மூன்று மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்டம் தோறும் பள்ளிகளுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டு, அரசு சார்பில் இலவச சீருடை தயாரிப்புக்கான, "டெண்டர்" பணிகளை துவங்க, துணி நூல் துறைக்கு பிப்ரவரி மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி, சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையடுத்து மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் சீருடை தயாரிப்புக்கான, "டெண்டர்" பணிகள் முடங்கின. சீருடை தயாரிப்பு மூலம் தங்களது கடன் சுமையை குறைத்து விடலாம் என எண்ணி கடன் வாங்கிய நெசவாளர்கள், "ஆர்டர்" வராததால், கடன் சுமை அதிகரித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், கைத்தறி நெசவாளர்கள் சங்கம் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் சங்கம் மூலம், ஆண்டுக்கு, 50 லட்சம் மீட்டர் துணி, சீருடைக்காக உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதிகரித்து வரும் நூல் விலையேற்றத்தாலும், மின்சாரம் மற்றும் "ஆர்டர்கள்" குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காததாலும், தங்களது தொழில்கூடங்களை மூடியே உள்ளனர்.


ஆண்டுதோறும், இலவச சீருடை ஆர்டரை நம்பி, தர்மபுரி மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். குறிப்பாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம், "ஆர்டர்" பெற்று வேலை செய்யும் தொழிலாளர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தற்போது தேர்தல் கமிஷன் பல்வேறு விதிகளை தளர்த்தியுள்ளதால், பணிக்கான, "டெண்டர்" விடும் வேலையில் அரசு முனைப்பு காட்ட துவங்கியுள்ளது. ஆனாலும், பள்ளி துவங்கும்போது மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us