UPDATED : மே 12, 2011 12:00 AM
ADDED : மே 12, 2011 11:13 AM
அ நிறம் | அளவு
நாட்டின் பல்வேறு பள்ளிகளுக்கும் தேவைப்படும் ஆசிரியர் எண்ணிக்கையை அறிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய சாப்ட்வேரை பயன்படுத்த உள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து பெறப்படவுள்ள தகவல்களைக் கொண்டு ஆசிரியர் பணி நியமனம் மற்றும் தேவை அவ்வப்போது கண்காணிக்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு அங்கமான இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர், எங்கு குறைவாக உள்ளனர், காலியிடங்கள் எவ்வளவு, பாட வாரியாக ஆசிரியர் தேவை எவ்வளவு போன்ற பகுக்கப்பட்ட தகவல்களை இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவதன் மூலமாகப் பெறலாம்.
