தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெயித்துக் காட்டுவோம் ஜெயிப்பதற்கு காரணம்: மாணவி

ஜெயித்துக் காட்டுவோம் ஜெயிப்பதற்கு காரணம்: மாணவி

ஜெயித்துக் காட்டுவோம் ஜெயிப்பதற்கு காரணம்: மாணவி


UPDATED : மே 28, 2011 12:00 AM

ADDED : மே 28, 2011 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2011 12:00 AM ADDED : மே 28, 2011 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுஷ்மிதா கூறியதாவது: மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று படித்த எனக்கு, ஆங்கிலத்தில் மாநில அளவில் முதல் இடமும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலும், மாநில அளவில் இரண்டாவது இடம் கிடைத்தது, இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.


எம்.பி.பி.எஸ்., படித்து, அத்துறை பேராசிரியராக ஆவதே என் லட்சியம். தினமலர் இதழ் நடத்திய ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தினமலர் வழங்கிய மாதிரி வினாத்தாள்களை நன்கு படித்தேன். அதில் இருந்த பெரும்பாலான கேள்விகள், அப்படியே பொதுத் தேர்விலும் வந்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மாநில அளவிலும், பாடம் வாரியாகவும் சாதனை படைக்க பெரிதும் உதவியது என்றார்.


மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகன் ரேங்க்: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்துள்ள மேலப்பாளையம், முஸ்லிம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் சதாம் உசேன், 10ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது ரேங்க் பெற்றுள்ளார்.


இவரது தந்தை அப்துல்ரஹ்மான், பீடி கம்பெனி ஒன்றில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது தாய் சுலேகாவும் பீடிச்சுற்றும் தொழிலாளி. "இரவில் 11 மணி வரையிலும் படிப்பேன். தேர்வு நாட்களில் காலையிலும் படிப்பேன்" என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us