UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM
ADDED : ஜூன் 07, 2011 12:36 PM
இந்திய ரயில்வேயின் துணை அமைப்பாக கடந்த 1974ல் ரைட்ஸ் (RITES) நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் போக்குவரத்து, கட்டுமானம் தொடர்புடைய துறைகளில் பல்வேறு துறை சார்ந்த கன்சல்டன்சி நிறுவனமாக இயங்கி வருகிறது. ஒரே குடையின் கீழ் பல்வேறு தொழில் நுட்பங்களை தரும் விதத்தில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு தொழில் நுட்பத்தை தனது வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு மாற்றுவதில் புகழ்பெற்றது.
ஐ.எஸ்.ஓ.,90012000 நிறுவனமான இந்த அமைப்புக்கு உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சார்ந்த 62 நாடுகளில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
இவ்வளவு சிறப்பு பெற்ற ரைட்ஸ் நிறுவனத்தில் 30 கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னிக்களை பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு அரசு நிபந்தனைக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது : ரைட்ஸ் நிறுவனத்தின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.08.1981 முதல் 01.08.1990க்குள் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச வயதில் உள்ள சலுகைகள் பற்றி அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
இன்ஜினியரிங் பட்டப்படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தேர்ச்சி முறை:
ரைட்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவி எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும். இரண்டு பகுதிகளைக் கொண்ட எழுத்துத் தேர்வின் முதல் பகுதி அப்ஜெக்டிவ் வகையிலும், இரண்டாம் பகுதி டெஸ்கிரிப்டிவ் வகையிலும் இருக்கும்.
அப்ஜெக்டிவ் வகைத் தேர்வில் ஜெனரல் எபிலிட்டி, ரீசனிங், பொது அறிவு, சிவில் இன்ஜினியரிங், ஜெனரல் சயின்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்தும், டெஸ்கிரிப்டிவ் தேர்வில் சிவில் இன்ஜினியரிங் பிரிவிலிருந்தும் கேள்விகள் இருக்கும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.300/க்கான ஸ்டேட் வங்கி டி.டி.,யை RITES LIMITED என்ற பெயரில் கூர்கானில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.100/க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி:
ரைட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் டி.டி.,யை எடுக்க வேண்டும். இதன் பின்னர் இந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று விபரங்கள் அறிந்து அதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் சமீபத்திய புகைப்படம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 20.06.2011க்குள் கிடைக்குமாறு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். இவற்றை அனுப்பும் கவரின் மீது தவறாமல் APPLICATION FOR THE GRADUATE EXECUTIVE TRAINEE என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி:
The Advertiser (RITES),
Post Box No. 9248,
Krishna Nagar Head Post Office,
Delhi - 110051
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 13.06.2011
படிவங்கள் சென்றடைய இறுதி நாள்: 20.06.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17.07.2011
நேர்காணல் நடைபெறும் நாள்: 24.08.2011
இணைய தள முகவரி: www.rites.com
