UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM
ADDED : ஜூன் 07, 2011 12:45 PM
அ நிறம் | அளவு
வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற கூடுதல் திறமைகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக தாய்மொழி தவிர்த்து ஆங்கிலம், பிரெஞ்சு, சைனீஸ், இந்தி போன்ற மொழிகளை கற்கலாம். கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், சிறந்த பேச்சாற்றல் போன்ற கூடுதல் திறன்களை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், உங்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும்.
இது தவிர புதுமையாக சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளை துணிவுடன் அணுகும் முறை, குழுவாக இணைந்து பணியாற்ற தேவையான பொறுமையுடன் கூடிய சாமர்த்தியம் ஆகியவையே நிறுவனங்கள் பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் திறமைகள். இத்தகைய திறமைகளை படிக்கும்போதே வளர்த்துகொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
