தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கட்டணம் இணையதளத்தில் வெளியிடாததால் குழப்பம்

புதிய கட்டணம் இணையதளத்தில் வெளியிடாததால் குழப்பம்

புதிய கட்டணம் இணையதளத்தில் வெளியிடாததால் குழப்பம்


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரங்களை, இணையதளத்தில் வெளியிடாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. காலையில் கட்டண விவரங்களை வெளியிட்ட போதும், சென்னை உட்பட எந்த மாவட்டத்திலும், அதை அறிந்து கொள்ள முடியாமல், பள்ளி நிர்வாகிகளும், பெற்றோரும் அவதிப்பட்டனர்.


கடந்த முறை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக, பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டன. மாவட்டத்தை தேர்வு செய்து, பள்ளியை, கிளிக் செய்தாலே, அந்த பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நேற்று கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடாததால், பெரும் குழப்பம் ஏற்பட்டது.


குழுத் தலைவர் ரவிராஜ பாண்டியன் இல்லாத நிலையில், குழுவின் சிறப்பு அலுவலர் திருஞானசம்பந்தம் தான், கட்டண நிர்ணயம் குறித்த தகவல்களை தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களை, சென்னைக்கு அழைத்து, அவர்களிடம் கட்டண நிர்ணய பட்டியலை ஒப்படைத்தார். அவர்கள், பஸ்களிலோ அல்லது ரயில்களிலோ சென்று, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம், பட்டியலை ஒப்படைக்க வேண்டும். அதன்பின், அப்பட்டியலை கல்வி மாவட்ட வாரியாக பிரித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பார். அவரிடம், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் சென்று, பட்டியலை பெற வேண்டும். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் இன்று பிற்பகலில் தான், பள்ளிகளுக்கு பட்டியல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், இன்று மாலையில் தான் புதிய கட்டண உயர்வு தெரியும். நேற்று காலை பட்டியலை வெளியிட்டவுடன், அதன் விவரங்களை உடனடியாக கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டிருந்தால், மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் என அனைவரும், உடனடியாக தெரிந்து கொண்டிருக்க முடியும். சென்னை, சைதாப்பேட்டையில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் இருக்கிறது. இங்கேயே, நேற்று மாலை வரை பட்டியல் வரவில்லை. இதனால், பள்ளி நிர்வாகிகளும், பெற்றோரும் கட்டணம் குறித்த தகவல்களை அறிய, கல்வி அலுவலகங்களுக்கு போன் செய்தபடி இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us