தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 உடனடித் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள், தத்கல் திட்டத்தில், ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை, தோல்வியடைந்த மாணவர்களுக்காக, வரும் 22ம் தேதி முதல், ஜூலை 2ம் தேதி வரை, உடனடித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இதற்காக, தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளுக்குள் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், தத்கல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேற்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜூன் 15 வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஒரு பாடமாக இருந்தால், தேர்வுக் கட்டணம் 85 ரூபாய், இரு பாடங்களாக இருந்தால் 135, மூன்று பாடங்களாக இருந்தால் 185 ரூபாய் செலுத்த வேண்டும்.


இத்துடன், சிறப்புக் கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கு, உடனடியாக, ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us