தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்

பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்

பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

"தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என, போக்குவரத்துத் துறை, மாவட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு இருக்க வேண்டும். முன்னும், பின்னும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என எழுதப்பட்டு இருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் மருந்துகள் கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் கதவுகள் சரியாக பூட்டப்படும் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.


டிரைவர், பத்து ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வாகனங்களில் குறிப்பிட்டுள்ள இருக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அதே போன்று, ஆட்டோக்களில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் மட்டுமே ஏற்றிச் செல்லும் போது, மிகவும் பாதுகாப்பாகவும், அவர்கள் உடமைகளை வாகனத்துக்கு வெளியே தொங்க விட்டு, பாதுகாப்பற்ற முறையில், ஆட்டோக்கள் இயக்கப்படக் கூடாது. இதே போன்று பெற்றோர், பள்ளி நிர்வாகங்களும், மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களில், ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி வாகனங்களில், பாதுகாப்பு, "கிரில்" பொருத்த வேண்டும். ஆசிரியர் நிலையில் ஒருவரை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பணியில் அமர்த்த வேண்டும்.


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களில், டிரைவர், உதவியாளர் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவேட்டை, பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் உதவியாளர், மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்தகையை நடைமுறைகளை அமல்படுத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us