UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM
ADDED : ஜூன் 14, 2011 01:18 PM
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 10 இளம் நிலை அறிவியல் பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் 2011-12ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு துவங்கியுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் பாடவாரியாக தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை வேளாண்மை பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
முதல் கட்ட கலந்தாய்வில் 1,837 மாணவ, மாணவியர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களது பெயர், கட்-ஆப் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் 300 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலை 9.30 மணி, மதியம் 1.30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும்.
மேலும் விவரங்களுக்கு http://www.tnau.ac.in/ugadmi11/index.html இணையதள முகவரியைக் காணவும்.
