UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM
ADDED : ஜூன் 14, 2011 05:02 PM
சுற்றுச்சூழலியல் என்பது சுற்றுப்புறத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பை படிக்கும் அறிவியல் துறையாகும். இத்துறை தொடர்பான படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
* தெரி பல்கலைக்கழகம், டில்லி
தெரி பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்பில் இத்துறை தொடர்பான படிப்பை வழங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.teriuniversity.ac.in
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
இங்கு முதுநிலை படிப்பில் சுற்றுச்சூழலியல் உள்ளது. தவிர, தொலைநிலைக் கல்வியிலும் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.bu.ac.in
* கவுகாத்தி பல்கலைக்கழகம், அசாம்
எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., பிரிவின் கீழ் இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.gauhati.ac.in
* புனே பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா
இப்பல்கலையில் சுற்றுச்சூழலியலில் முதுநிலை மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் உள்ளன. முதுநிலை படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். விவரங்களுக்கு www.unipune.ac.in
* மைசூரு பல்கலைக்கழகம், கர்நாடகா
இங்கு எம்.எஸ்சி., , எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் இந்த படிப்பு உள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.unimysore.ac.in
