தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை தரும் புதுப்புது படிப்புகள்

வேலை தரும் புதுப்புது படிப்புகள்

வேலை தரும் புதுப்புது படிப்புகள்


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எளிதில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் புதுப்புது படிப்புகள், மதுரையில் அறிமுகமாகி இருக்கின்றன. பி.எஸ்சி., டெலிவிஷன் புரடக்ஷன்  தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு (டெலிவிஷன் புரடக்ஷன்)என்பது எழுத்து வடிவில் இருக்கின்ற செய்தியை திறமைமிக்க நடிகர்கள், சரியான இடத்தேர்வு, படமாக்குதல், உரிய முறையில் படத்தொகுப்பை அமைத்தல் மற்றும் அதை ஒளிபரப்பும் நுட்பம் அறிதல் போன்றவைகளை உள்ளடக்கியது. இப்படிப்பில் சேர பிளஸ் 2 முடித்திருந்தால் போதும். அனைத்து பிரிவு மாணவர்களும் தகுதியானவர்கள்.


எங்கு படிக்கலாம்
மதுரை  அருப்புக்கோட்டை ரோடு டி.வி.ஆர்., நகரில் அமைந்துள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் அனுமதிப் பெற்று இதைப் முழுநேர பட்டப்படிப்பாக நடத்துகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் தாங்களாகவே பயிற்சி அளித்து குறுகிய காலச் சான்றிதழ் படிப்பினை நடத்துகின்றனர். ஆனால் டிகிரி படிப்பாக நடத்தப்படும் டெலிவிஷன் புரடக்ஷன் படிப்பு உரிய அனுமதி பெற்று நடத்தக்கூடியது.


வேலைவாய்ப்பு
தொலைக்காட்சி நிலையம், திரைப்படத்துறை, விளம்பரம், போன்ற நிறுவனங்களில் பணியாற்ற முடியும். எம்.ஏ., படிப்புகள்டில்லியில் உள்ள நேஷனல் முஸ்லிம் இன்ஸ்டிடியூட்டில், எம்.ஏ., பிஎச்.டி., படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.,வில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டமும், பிஎச்.டி.,யில் சேர 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 22 வயது முடிந்திருக்க வேண்டும்.


சேர்க்கை நடக்கும் பாடப்பிரிவுகள்
* எம்.ஏ., (ஹிஸ்ட்ரி ஆப் ஆர்ட்)
* எம்.ஏ., (கன்சர்வேஷன்)
* எம்.ஏ., (மியூசியாலஜி)
* பிஎச்.டி., (ஹிஸ்ட்ரி ஆப் ஆர்ட்)
* பிஎச்.டி., (கன்சர்வேஷன்)
* பிஎச்.டி., (மியூசியாலஜி)


எம்.ஏ., படிப்பில் சேர மாணவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 கடைசி தேதி. விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு http://www.nmi.gov.in போன் 011  23792249, 23011901.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us