வேலைக்கு திறமையான மாணவர்கள் கிடைப்பதில்லை: துணைவேந்தர்
வேலைக்கு திறமையான மாணவர்கள் கிடைப்பதில்லை: துணைவேந்தர்
UPDATED : ஆக 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
வேலைவாய்ப்புக் கண்காட்சிகளுக்கு வேலைதேடி வருபவர்களில் ஐந்தில் ஒரு பங்கு வேலைகளுக்குக் கூட திறமையான மாணவர்கள் கிடைப்பதில்லை. தொழில் துறையினர் எதிர்பார்க்கக்கூடிய திறமைகள் மாணவர்களிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.
பாதுகாப்புக் கல்வித்துறையும் என்.சி.சி., இயக்ககமும் ஏற்பாடு செய்திருந்த, கல்லூரி மாணவர்களுக்கான தலைமைப் பண்பு குறித்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேசினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 60 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் 9 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்தது. திறமையான மாணவர்கள் போதிய அளவு இல்லாததால் மீதமுள்ள இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய முடியாமல் போனது என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேரே கல்லூரிகளில் படிக்கச் செல்கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கின்றனர். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற திறமைகளை வளர்க்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டிலிருந்து இளநிலைப் பட்டபடிப்பு மாணவர்கள் சாப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு உள்ளிட்ட திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சி பெற வேண்டும் என்ற முறையைக் கொண்டு வரப் போகிறோம் என்றார் ராமச்சந்திரன்.

