UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 11:19 AM
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் குருத்தமான்குண்டில், நடக்க முடியாத அண்ணனை, உடைந்த வீல் சேரில், தம்பிகள் இருவரும், 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் செய்தி, தினமலர் இதழில் வெளியானது.
செய்தியை படித்து, தமிழகம் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஏராளமானோர் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றனர்.
நேற்று மதுரை அரிசி வர்த்தகர் ராதாகிருஷ்ணன், மாணவருக்கு நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள வீல்சேர் அனுப்பி வைத்தார். வீல் சேரை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) லூர்து ஜோஸ்மின், மாணவரின் தாயார் எஸ்தரிடம் வழங்கினார்.
மாணவர் சாமுவேல் தாயார் எஸ்தர் கூறியதாவது: தினமலர் இதழ் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டோம். செய்தி வெளிவந்ததும் ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து மொபைலில் தொடர்பு கொண்டனர். இடை விடாமல் போன் வந்தது. தினமலர் இதழுக்கு நானும், என் குடும்பத்தாரும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.
