UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 12:08 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலையில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் வேகமாக நிரம்பி வந்தன. இதில் ஓசி, பிசிஎம், பிசி, எம்பிசி, எஸ்சி இடங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன.
ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் எஸ்.டி. இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தற்போது எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில் 1007 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 68208 இடங்களும் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில் நடந்து வரும் பொறியியல் கலந்தாய்வில் மொத்தமாக 69,217 இடங்கள் மாணவ சேர்க்கைக்காக உள்ளன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன் பிறகு துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
